/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நகை மதிப்பீட்டாளர் பயிற்சி சேர்க்கை மண்டல இணைப்பதிவாளர் அறிவிப்பு
/
நகை மதிப்பீட்டாளர் பயிற்சி சேர்க்கை மண்டல இணைப்பதிவாளர் அறிவிப்பு
நகை மதிப்பீட்டாளர் பயிற்சி சேர்க்கை மண்டல இணைப்பதிவாளர் அறிவிப்பு
நகை மதிப்பீட்டாளர் பயிற்சி சேர்க்கை மண்டல இணைப்பதிவாளர் அறிவிப்பு
ADDED : செப் 27, 2025 02:24 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நகை மதிப்பீட்டாளர் பயிற்சியில் சேரலாம் என கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;
விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதி நேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வரும் அக்., 15ம் தேதி துவங்க உள்ளது.
வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்று மட்டும் பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக்கான விண்ணப்பத்தை ரூ.115 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 17 வயது நிரம்பியவர்கள் இப்பயிற்சியில் சேரலாம். பயிற்சி கட்டணமாக ரூ.4,550 செலுத்த வேண்டும். 2 மாதங்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும்.
மொத்தமாக உள்ள 100 மணி நேரங்களில் 40 மணி நேரம் வகுப்பறை பயிற்சியும், 60 மணி நேரம் செயல்முறை பயிற்சியும் அளிக்கப்படும்.
பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ், தரம் அறியும் உபகரணங்களும் வழங்கப்படும். இப்பயிற்சியை முடித்தவர்கள் கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வங்கிகளிலும் நகை மதிப்பீட்டாளராக பணியில் சேரலாம்.
இது தொடர்பான மேலும் விபரங்களுக்கு விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வரை 04146-259467 மற்றும் 94425 63330 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.