ADDED : பிப் 01, 2024 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை மார்க்கெட் கமிட்டிக்கு அதிக வரத்தால் விவசாயிகள் பொருட்களை இன்று கொண்டு வரவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
உளுந்தூர்பேட்டை மார்க்கெட் கமிட்டிக்கு நேற்றும் விவசாயிகளின் நெல், உளுந்து உள்ளிட்ட மூட்டைகள் வரத்து அதிக அளவில் வந்தது. இதனால் இடவசதி இல்லாமல், சாக்கு மாற்றுதல், மூட்டை தூக்கும் பணி முடிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
நேற்று கொண்டுவரப்பட்ட மூட்டைகள் எடை போடுதல், சாக்கு மாற்றுதல் பணி நடக்க இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு 2வது முறையாக இன்று ( 1ம் தேதி) உளுந்தூர்பேட்டை மார்க்கெட் கமிட்டியில் ஏலம் நடக்காது என மார்க்கெட் கமிட்டி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எனவே இன்று மாலை 6 மணிக்கு மேல் விவசாயிகள் தங்களுடைய பொருட்களை கொண்டு வரலாம் என தெரிவித்துள்ளது.