/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு விழா
/
என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு விழா
ADDED : பிப் 10, 2026 04:59 AM

சங்கராபுரம்: தேவபாண்டலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விரியூர் மகளிர் கல்லுாரி சார்பில் என்.எஸ்.எஸ்., முகாம் கடந்த ஒரு வாரமாக நடந்தது. இதன் நிறைவு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் பினியன்மேரி குருசம்மாள் தலைமை தாங்கினார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் கண்ணன் வரவேற்றார். வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன், வள்ளலார் மன்ற தலைவர் பால்ராஜ், வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன், கார்குழலி அறக்கட்டளை தலைவர் தாமோதரன், மாவட்ட முத்தமிழ்ச் சங்கத் தலைவர் முருககுமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பள்ளி தலைமை ஆசிரியர் திருநிறைச்செல்வி, முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
பேராசிரியர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

