ADDED : அக் 03, 2025 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த என்.எஸ்.எஸ்., முகாம் விழா பெற்றது.
சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில் காட்டுவன்னஞ்சூர் கிராமத்தில் என்.எஸ்.எஸ்., முகாம் நடந்தது. நேற்று முகாம் நிறைவு விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். பாண்டலம் அரிமா சங்க தலைவர் கிருஷ்ணன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, மாவட்ட தலைவர் ஏழுமலை முன்னிலை வகித்தனர். என்.எஸ்.எஸ்., அலுவலர் கணபதி வரவேற்றார். முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றம் சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஆசிரியர் இனாயத்துல்லா நன்றி கூறினார்.