ADDED : செப் 29, 2025 01:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் என்.எஸ்.எஸ்., முகாம் துவக்க விழா நடந்தது.
ஊராட்சி தலைவர் பாப்பாத்தி நடராஜன் தலைமை தாங்கினார். துணை தலைவர் மணிகண்டன், துவக்க பள்ளி தலைமை ஆசிரியை அமுதா முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் திருநிறைச்செல்வி வரவேற்றார். ஒன்றிய செயலாளர் கதிரவன் என்.எஸ்.எஸ்., முகாமை துவக்கி வைத்தார். விழாவில் பள்ளி ஆசிரியர்கள், என்.எஸ்.எஸ்., மாணவர்கள் பங்கேற்றனர்.