ADDED : பிப் 03, 2026 05:54 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் லஷ்மி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில் சின்னசேலத்தில் என்.எஸ்.எஸ்., திட்ட முகாம் துவங்கியது.
சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமின் துவக்க நிகழ்ச்சிக்கு லஷ்மி ஹைகிரிவாஸ் கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், இயக்குனர் சரவணன், பொருளாளர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லுாரி பேராசிரியர் மகேந்திரன் வரவேற்றார்.
சின்னசேலம் சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் லாவண்யா ஜெய்கணேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பள்ளி தலைமை ஆசிரியர் வேல்முருகன், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பன்னீர்செல்வம் வாழ்த்துரை வழங்கினர்.
லஷ்மி கல்லுாரி முதல்வர் பழனியம்மாள் சின்னசேலம் பகுதியில் தொடர்ந்து ஒருவாரம் நடத்தப்படும் சிறப்பு முகாம் பணிகள் குறித்தும், மாணவர்கள், தலைமை பண்புகளை வளர்க்க முன்வரவேண்டும் எனவும் பேசினார். நிகழ்ச்சியை கல்லுாரி துறை தலைவர் மணிகண்டன் தொகுத்து வழங்கினார். கல்லுாரி பேராசிரியை சுபஸ்ரீ நன்றி கூறினார்.

