/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
எடையூரில் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம் துவக்கம்
/
எடையூரில் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம் துவக்கம்
ADDED : செப் 29, 2025 01:05 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சார்பில் எடையூர் கிராமத்தில் துாய்மை பணி, மருத்துவம் உள்ளிட்ட ஒரு வார சிறப்பு முகாம் துவக்க விழா நடந்தது.
ஒன்றிய குழு உறுப்பினர் சண்முகம் தலைமை தாங்கினார். ஊராட்சித் துணைத் தலைவர் தமிழேந்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஏழுமலை, எஸ்.எம்.ஜி., தலைவர் வள்ளி, உதவி தலைமை ஆசிரியர் ஜெயந்தி முன்னிலை வகித்தனர். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் அருணாச்சலம் வரவேற்றார்.
வட்டார வள மைய மேற்பார்வையாளர் சந்தியாகு சிங்கராயன் முகாமினை துவக்கி வைத்தார். ஆசிரியர்கள் சிலம்பரசன், சித்தாமூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயசீலன் உள்ளிட்ட பலர் கொண்டனர்.
எடையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் ரவி முகாமிற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார். உதவி திட்ட அலுவலர் மாரி நன்றி கூறினார்.