/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்கள் 3 வது நாளாக காத்திருப்பு போராட்டம்

ADDED : டிச 22, 2025 05:24 AM

கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவனையில் மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எம்.ஆர்.பி., செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னையில் 4வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசார் விடுவித்தனர். ஆனா லும், எம்.ஆர்.பி., செவிலியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 4வது நாளாக போராட்டம் செய்து வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சங்க மாநில நிர்வாகிகளிடம் தமிழக அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும், எம்.ஆர்.பி., செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் மாவட்ட செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் நேற்று மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தமிழ்நாடு எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்க நிர்வாகி பவானி தலைமை தாங்கினார். மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் எம்.ஆர்.பி., செவிலியர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.