ADDED : டிச 25, 2025 06:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவனையில் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் 6வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
எம்.ஆர்.பி., செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கடந்த 18ம் தேதியில் இருந்து சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன் நடத்திய பேச்சவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், போராட்டம் தொடர்ந்து வருகிறது.
அதனையொட்டி, கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் மாவட்ட செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 6 நாளாக போராட்டம் தொடர்ந்தது.

