ADDED : நவ 24, 2024 11:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; உளுந்துார்பேட்டையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் ஊட்டச்சத்தை உறுதி செய் கட்டம்-2 திட்டத்தின் கீழ் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி, தாய்மார்களுக்கு ஊட்டசத்து பெட்டகங்களை வழங்கினார். மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தனர். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் 50 தாய்மார்களுக்கு நெய், உலர் பேரிச்சம்பழம், ஊட்டசத்து பவுடர் உள்ளிட்ட பல்வேறு ஊட்டசத்து பொருட்கள் அடங்கிய பெட்டகம் வழங்கப்பட்டது.