/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கச்சிராயபாளையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா: போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி
/
கச்சிராயபாளையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா: போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி
கச்சிராயபாளையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா: போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி
கச்சிராயபாளையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா: போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி
ADDED : பிப் 16, 2025 11:08 PM

கச்சிராயபாளையத்திற்கு, சுற்றுவட்டார கிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கானோர் நாள்தோறும் வந்து செல்கின்றனர். இங்கு 200க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்களும், கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளதால், கரும்பு ஏற்றி செல்லும் வாகனங்கள் அதிக அளவிலும் செல்கின்றன.
மேலும், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதிகளில் நுாற்றுக்கணக்கான அரிசி ஆலைகளும் இயங்கி வருவதால் அதிகப்படியான லோடு வாகனங்களும் இந்த பகுதியை கடந்து செல்கின்றன.
இந்நிலையில், இங்குள்ள காமராஜர் சாலை, எல்.எப்., ரோடு, டேம்ரோடு உள்ளிட்ட பகுதிகளில், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனை ஒழுங்குபடுத்தி, முறைப்படுத்த போலீசார் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை.
வருவாய்த் துறை சார்பில், சாலை ஓர ஆக்கிரமிப்புகளை அகற்ற பல முறை அளவீடு செய்யப்பட்டு குறியிடப்பட்டது. தொடர்ந்து அதிகாரிகளின் அலட்சியத்தாலும் அரசியல் பிரமுகர்களின் தலையீட்டாலும் பணிகள் கிடப்பில் போடப்பட்டன.
இந்த போக்குவரத்து பிரச்னையால், கலெக்டரின் வாகனம் கூட, ஒரு மணி நேரம் வரை, நெரிசலில் சிக்கி தவித்த சம்பவங்கள் நடந்துள்ளது. ஆனாலும் தற்போது வரை, இந்த உரிய தீர்வு இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், 'இந்த பிரச்னை கடந்த பல ஆண்டுகளாக, உள்ளது.
ஆக்கிரமிப்புகளை அகற்ற, அளவீடு செய்யும் பணிகளை கண் துடைப்பாக துவங்கிய அதிகாரிகள், அதற்கு பிறகு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. கலெக்டர் மற்றும் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

