ADDED : ஜூலை 15, 2025 06:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் கூட்டுறவு துறை சார்பில் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட ஆயில் அரவை மில் திறப்பு விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி சரக துணைப்பதிவாளர் சுகந்தலதா முன்னிலை வகித்தார். செயலாட்சியர் செந்தில் வரவேற்றார். மண்டல இணைப்பதிவாளர் முருகேசன், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட ஆயில் அரவை மில் கட்டடத்தை திறந்து வைத்து, குத்து விளக்கேற்றினார்.
நிகழ்ச்சியில் விற்பனை சங்க பொது மேலாளர் (பொறுப்பு) பக்தவாச்சலம், கூட்டுறவு சார்பதிவாளர்கள், பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.