ADDED : பிப் 21, 2024 10:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : பாம்பு கடித்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சின்னசேலம் அடுத்த பாக்கம்பாடியை சேர்ந்தவர் பாலுசாமி மகன் கண்ணன்,65; கடந்த 18ம் தேதி கண்ணனும், அவரது மகன் பாஸ்கரனும் விளைநிலத்தில் பைப் புதைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, தண்ணீர் குடிப்பதற்காக கிணற்றிற்கு அருகே சென்ற கண்ணனை பாம்பு கடித்துள்ளது.
சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.