/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மது பாட்டில் கடத்தல் ஒருவர் கைது
/
மது பாட்டில் கடத்தல் ஒருவர் கைது
ADDED : மே 24, 2025 12:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்:சங்கராபுரம் அருகே பைக்கில் மது பாட்டில் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் அடுத்த முரார்பாளையம் கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த, முரார்பாளையத்தை சேர்ந்த ஜெயமணி, 55; என்பவரை மடக்கி அவரிடமிருந்த பையை சோதனை செய்தனர். அப்போது அவர் கள்ள சந்தையில் விற்க, மதுபாட்டில்களை வாங்கி சென்றது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த, 10 குவார்ட்டர் பாட்டில்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.