ஜே.ஆர்.சி., ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம்
ஜே.ஆர்.சி., ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம்
UPDATED : நவ 28, 2026 08:02 PM
ADDED : நவ 28, 2026 08:02 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் ஜே.ஆர்.சி., ஆசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) ஜோதிமணி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) விஷ்ணுமூர்த்தி முன்னிலை வகித்தார். ஜே.ஆர்.சி., மாவட்ட கல்வி கன்வீனர் துரை வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்கள் ஆர்.கே.எஸ்., கல்வி நிறுவனங்களின் தலைவர் மகுடமுடி, சேலம் மாவட்ட கன்வீனர் பிரபாகர், ஐ.ஆர்.சி.எஸ்., சேர்மன் பொன்னரசு, ஜே.ஆர்.சி., மாநில கமிட்டி உறுப்பினர் மாயக்கண்ணன், ஜே.ஆர்.சி., மாவட்ட பொருளாளர் பாரதியார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பயிற்சியாளர் விஜயகுமார், ஐ.ஆர்.சி.எஸ்., ஆயுட்கால உறுப்பினர் ஜானகிராமன் பயிற்சி அளித்தனர்.
நிகழ்ச்சியில் சி.பி.ஆர்., எனப்படும் இதய துடிப்பு மற்றும் சுவாசம் நின்றுவிட்டால் மூளைக்கு ரத்த ஓட்டத்தை தக்க வைக்க செய்யப்படும் அவசர முதலுதவி, தீ மற்றும் பேரிடர் விபத்து காலங்களில் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைக்குழு உறுப்பினர்கள் கண்ணன், மாவட்ட இணை கன்வீனர் தனபால் பங்கேற்றனர். ஆறுமுகம் நன்றி கூறினார்.
