ADDED : ஜன 31, 2026 07:02 AM
அ நிறம் | அளவு
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே சாலையில் குறுக்கே ஓடிய நாய் மீது மொபட் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
சங்கராபுரம் அடுத்த விரியூரை சேர்ந்தவர் தேவசகாயம், 51; இவர் கடந்த 19 ம் தேதி, தனது மொபட்டில் மையனுாரில் உள்ள தனது மகன் வீட்டிற்கு புறப்பட்டார். அரசராம்பட்டு அருகே சென்றபோது சாலையில் குறுக்கே சென்ற நாய் மீது மொபட் மோதியதில் கீழே விழுந்து படுகாயமடைந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேவசகாயம், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்தார்.
இது குறித்த புகாரின்பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
