/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஒரு லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் பாதிப்பு: 370 வீடுகள் சேதம்; 66 கால்நடைகள் பலி
/
ஒரு லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் பாதிப்பு: 370 வீடுகள் சேதம்; 66 கால்நடைகள் பலி
ஒரு லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் பாதிப்பு: 370 வீடுகள் சேதம்; 66 கால்நடைகள் பலி
ஒரு லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் பாதிப்பு: 370 வீடுகள் சேதம்; 66 கால்நடைகள் பலி
ADDED : டிச 04, 2024 06:28 AM

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம் முக்கிய பிரதான தொழிலாக உள்ளது. இதில் அதிகளவில் நடப்பாண்டு வேளாண் பயிர்களான உளுந்து 41,251, நெல் 31,715, கரும்பு 16,826, மக்காசோளம் 15,108, பருத்தி 1,674, நிலக்கடை 1875 என 2 லட்சத்து 71 ஆயிரத்து 122 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்தனர்.
அதேபோல் தோட்டக்கலை பயிர்களில் அதிகளவில் மரவள்ளி 11,767, மஞ்சள் 2,158, வாழை 514, சேப்பங்கிழங்கு 484, சின்ன வெங்காயம் 458, தர்பூசணி 273 என மொத்தம் 39 ஆயிரத்து 135 ஏக்கர் பரப்பளவில் சாகுபடிசெய்திருந்தனர்.
மாவட்டத்தில், 'பெஞ்சல்' புயல் காரணமாக 2 நாட்கள் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. அதில் கோமுகி,மணிமுக்தா அணைகள் நிரம்பி ஆறு வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், ஆற்றில் வெள்ளப்பெருக்குஏற்பட்டது.
அதேபோல் சாத்தனுார் அணை திறக்கப்பட்டதால், மாவட்டத்தையொட்டியுள்ள மூங்கில்துறைப்பட்டு,திருக்கோவிலுார் பகுதியில் உள்ள தென்பென்னையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி , ஆற்றையொட்டிய கிராமங்கள்,விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து பெரும் சேதங்களை ஏற்படுத்தியது.
தற்போது மழை நின்ற நிலையில், அனைத்து பகுதிகளிலும் படிப்படியாக தண்ணீர் வடிந்து வருகிறது.இதனையடுத்து விவசாய சாகுபடி நிலங்களில் மழை நீர் மற்றும் ஆற்று வெள்ளம் புகுந்து பயிர்கள் சேதம் தொடர்பாகவேளாண் மற்றும் தோட்டக்லை துறை அலுவலர்கள், அந்தந்த கிராம வி.ஏ.ஓ.,க்களுடன் இணைந்து கணக்கெடுப்புபணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அதில் இதுவரை நீரில் மூழ்கிய நிலையில் வேளாண் பயிர்கள் 1 லட்சம் ஏக்கரும், தோட்டக்லை பயிர்கள் 7,500 ஏக்கர் என மொத்தம் 1 லட்சத்து 7000 ஏக்கர் பரப்பளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதுதெரியவந்துள்ளது. கணக்கெடுப்பு பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் தொடர் மழையின் ஈரப்பதம், பெருக்கெடுத்து ஓடிய வெள்ள மழை நீரில் சேதமடைந்த வீடுகள் மற்றும்கால்நடைகள் பாதிப்பு தொடர்பாக வருவாய் துறையினர் மூலம் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
அதில்,பகுதியாகவும், முழுவதும் இடிந்து விழுந்தது என மொத்தம் 370 வீடுகள் சேதமடைந்துள்ளது.
மழை நீரில்மூழ்கியும், கடும் மழையில் பசுமாடுகள், கன்று குட்டிகள், ஆடுகள் என மொத்தம் 66 கால்நடைகள் பலியாகியுள்ளன.மாவட்டத்தில் மழை வெள்ளம், விவசாயிகளை பெரும் பாதிப்படைய செய்திருக்கிறது.