/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உரக்கழிவு கட்டடம் கட்ட எதிர்ப்பு
/
உரக்கழிவு கட்டடம் கட்ட எதிர்ப்பு
ADDED : நவ 20, 2024 09:45 PM
திருக்கோவிலூர்; நகராட்சி சார்பில் உரக்கழிவு கட்டடம் கட்டும் பணியை கைவிடக் கோரி அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருக்கோவிலூர், சந்தப்பேட்டை, அம்பேத்கர் நகர் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில், திடக்கழிவு மேலாண்மை செயல்திட்டத்தின் கீழ், உரக்கழிவு கட்டடம் கட்டுவதற்கு நகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.
குடியிருப்புகள் மிகுந்த இப்பகுதியில் உரக்கழிவு திட்டம் செயல்படுத்தப் பட்டால், துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதியில் குடியிருப்போருக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறி அனைத்துக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சந்தைப்பேட்டை தாலுகா அலுவலகம் முன்பாக நடந்தது.
அ.தி.மு.க., நகர செயலாளர் சுப்பு, த.மா.கா., மாவட்ட தலைவர் கணேஷ், இந்திய கம்யூ., நகர செயலாளர் கிப்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்ரமணி, நகர செயலாளர் கண்ணன், பத்து ரூபாய் இயக்க மாவட்ட செயலாளர் டேவிட் குமார் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

