/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இயற்கை விவசாயிகள் பட்டறிவு பயணம்
/
இயற்கை விவசாயிகள் பட்டறிவு பயணம்
ADDED : அக் 02, 2024 11:33 PM

கள்ளக்குறிச்சி : திருக்கோவிலுார் வட்டார இயற்கை விவசாயிகள் ஆத்மா வெளிமாநில பட்டறிவு பயணம் மேற்கொண்டனர்.
கர்நாடகா மாநிலம் சிந்தாமணியில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட விவசாயிகளுக்கு, அங்கு இயற்கை வேளாண்மை மூலம் பயிர் செய்யும் புதிய சாகுபடி தொழில்நுட்பங்கள், மண்புழு வளர்ப்பு, காய்கறி சாகுபடி, இயற்கை முறை விவசாயத்தின் மூலம் அதிக மகசூல் பெறுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இயற்கை இடுபொருள் தயார் செய்வதை செயல்முறை விளக்கம் மூலம் அறிந்து கொண்டனர். மேலும், இயற்கை முறையில் களைகள், நோய் பூச்சி கட்டுபடுத்துதல் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கி கூறப்பட்டது.
பட்டறிவு பயணத்திற்கான ஏற்பாடுகளை வேளாண் உதவி இயக்குனர் கிருஷ்ணகுமாரி , ஆத்மா திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.