/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இயற்கை வேளாண் விழிப்புணர்வு முகாம்
/
இயற்கை வேளாண் விழிப்புணர்வு முகாம்
ADDED : மார் 23, 2025 09:48 PM
சங்கராபுரம்: கள்ளக்குறிச்சி அடுத்த காளசமுத்திரம் வேளாண் அறிவியல் நிலையத்தில் நாளை (25ம் தேதி)இயற்கை வேளாண்மை விழிப்புணர்வு முகாம் நடக்கிறது.
இதுகுறித்து சங்கராபுரம் வேளாண் உதவி இயக்குனர் ஆனந்தன் செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டம், காளசமுத்திரம் வேளாண் அறிவியல் நிலையத்தில் இயற்கை வேளாண்மைக்கு ஏற்ற உரங்கள், இடுபொருட்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நாளை 25ம் தேதி காலை 10:00 மணிக்கு நடக்கிறது. இயற்கை விவசாயத்தில் ஆர்வமுள்ள விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
பங்கேற்கும் விவசாயிகள் வேளாண் அலுவலகத்தில் தங்கள் பெயர், முகவரியை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.