செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நம்ம பள்ளி நம்ம வாத்தியார் பேட்டி / நம்ம பள்ளி நம்ம வாத்தியார் பேட்டி
/
கள்ளக்குறிச்சி
நம்ம பள்ளி நம்ம வாத்தியார் பேட்டி
ADDED : ஜூன் 07, 2025 10:12 PM
கென்னடி
தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழகம்
கள்ளக்குறிச்சி நகரின் மையத்தில் அமைந்துள்ள பழமையான பள்ளி, தமிழக முதல்வரால் தரம் உயர்த்தப்பட்டு பழமை வாய்ந்த கட்டடங்கள் ரூ.2 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டது. தற்போது புதிய வளாகத்தில் ரூ.8 கோடி மதிப்பில் 32 வகுப்பறைகள், ஆய்வங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள் வசதிகளுடன் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன. கிராம, மலைவாழ் பகுதியில் இருந்து வரும் பெண் குழந்தைகளுக்கு இப்பள்ளி மிகச்சிறந்த தேர்வு. பள்ளியின் மன்ற செயல்பாடுகளில் அதிகளவு மாணவர்கள், திறமைகளை வெளிப்படுத்துகின்றனர். சமூகத்தில் சிறந்த மாணவிகளை இப்பள்ளி உருவாக்குகிறது. இதர பள்ளிகளை காட்டிலும் இங்கு நிறைய துறைகளை பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்புகள் உள்ளன. தலைமை ஆசிரியர்,ஆசிரியர்களின் சிறப்பான கவனத்தால் மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக உருவாகி உள்ளது.
இரா.கீதா
பள்ளி தலைமையாசிரியர்
கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவிகள் இப்பள்ளியில் படிக்கின்றனர். சி.இ.ஓ., கார்த்திகா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கென்னடி மற்றும் உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் இளவரசி மற்றும் உறுப்பினர்கள், ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புடன் மாவட்டத்தில் முதன்மையான பள்ளியாக திகழ்கிறது.பாடத்தோடு நில்லாமல் விளையாட்டு, ஓவியம், நுண் கலைகள், செயற்கை நுண்ணறிவு, வாய்ப்பாட்டு, கருவியிசை, தையல், கராத்தே, சிலம்பம், பென்சிங் என பல்துறைகளை கற்பிக்கும் கலைக்கூடமாக திகழ்கிறது. மேலும், தேசிய திறனறி தேர்வில் கடந்தாண்டு, 6 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பல்துறை வல்லுனர்கள் மூலம் அவ்வப்போது அறிவுரை, தன்னம்பிக்கை கூட்டங்கள் நடத்துகிறோம். இப்பள்ளி மாணவிகள் தமிழகம் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் சிறப்பான பணியில் உள்ளனர்.
சத்யா பாபு
நுாற்றாண்டு இன்னர்வீல் சங்க தலைவர்,
இந்த பள்ளி, கள்ளக்குறிச்சியின் பெருமை மிகு அடையாளங்களில் ஒன்று. ஆண்டுதோறும் சிறந்த மதிப்பெண்களுடன் மாணவிகள் பொதுத்தேர்வில் வெற்றி பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தேசிய, மாநில அளவிலான கலை, விளையாட்டு போட்டிகளில் வெற்றி வாகை சூடுவது நம் பகுதிக்கு பெருமை சேர்க்கிறது. மாணவிகள் எண்ணிக்கைக்கேற்ப பள்ளி பெரிதும் விரிவுபடுத்தப்பட்டு ஆலமரம் போல் வளர்ந்து நிற்கிறது. இங்கு படித்த மாணவிகள் பலர் டாக்டர், பொறியாளர், ஆசிரியர், போலீஸ்துறைகளில் பணியாற்றுவதை பார்க்கும்போது, இப்பள்ளி எங்கள் பகுதிக்கு கிடைத்த போதி மரமாய் தெரிகிறது. நானும் இப்பெருமைமிகு பள்ளியில் படித்த முன்னாள் மாணவி என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
சுதா வைத்தியலிங்கம்
தொழிலதிபர், கள்ளக்குறிச்சி
இப்பள்ளி ஒவ்வொரு ஆண்டும் சாதனையில் முன்னோக்கி செல்வதை கண்கூடாக பார்க்க முடிகிறது. கல்வி, கலை, விளையாட்டு, தொழில்நுட்பம், கட்டடம் ஆகிய கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் தனியார் பள்ளிகளுக்கு இணையான தரத்தினை கொண்டுள்ளது.மிகப்பெரிய நுாலகம், விளையாட்டு துறைக்கு நல்ல பயிற்சி, போட்டி தேர்வுகளில் சிறப்பிடம் பெறுவது என இப்பள்ளி, மாணவிகள் முன்னேற்றத்தை தாரக மந்திரமாக கொண்டு செயல்படுகிறது.உட்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக இருக்கும் காரணத்தால் மாணவிகளுக்கும், பெற்றோருக்கும் மிகவும் பிடித்தமானதொரு பள்ளியாக செயல்படுகிறது என்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. தலைமையாசிரியர் கீதா தலைமையில் ஆசிரியர்கள் சிறப்பாக செயல்படுவது முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம்.