/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தென்மண்டல கிரிக்கெட் போட்டி ஆக்ஸாலிஸ் பள்ளி மாணவர்கள் வெற்றி
/
தென்மண்டல கிரிக்கெட் போட்டி ஆக்ஸாலிஸ் பள்ளி மாணவர்கள் வெற்றி
தென்மண்டல கிரிக்கெட் போட்டி ஆக்ஸாலிஸ் பள்ளி மாணவர்கள் வெற்றி
தென்மண்டல கிரிக்கெட் போட்டி ஆக்ஸாலிஸ் பள்ளி மாணவர்கள் வெற்றி
ADDED : ஆக 27, 2025 11:21 PM

கள்ளக்குறிச்சி: தென்மண்டல அளவில் நடந்த கிரிக்கெட் போட்டியில் தச்சூர் ஆக்ஸாலிஸ் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
தென்மண்டல அளவில் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கான கிரிக்கெட் போட்டி தென்காசியில் உள்ள வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் நடந்தது. இதில், தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய 3 மாநிலங்களில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
14 மற்றும் 17 வயது பிரிவினருக்கு தனி, தனியாக போட்டி நடத்தப்பட்டது. இதில், 17 வயது பெண்கள் பிரிவில் கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் ஆக்ஸாலிஸ் பள்ளி சார்பில் போட்டியிட்ட 8ம் வகுப்பு மாணவி ஷிவானி, 9ம் வகுப்பு மாணவிகள் பிரணவிகா, தனுஷா ஆகியோர் சிறந்த முறையில் விளையாடி வெற்றி பெற்று, வெள்ளி பதக்கத்தை பெற்றனர்.
அதேபோல், 14 வயது ஆண்கள் பிரிவில் 7ம் வகுப்பு மாணவர் தருண் வெற்றி பெற்று, வெண்கல பதக்கத்தை பெற்றார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளியின் தாளாளர் பாரத்குமார் பாராட்டினார். பள்ளி முதல்வர் ஜாய்ஸ்ரெக்ஸி, உடற்கல்வி ஆசிரியர் பரசுராமன் ஆகியோர் உடனிருந்தனர்.