/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரிஷிவந்தியத்தில் பாதயாத்திரை பா.ஜ., தலைவருக்கு உற்சாக வரவேற்பு
/
ரிஷிவந்தியத்தில் பாதயாத்திரை பா.ஜ., தலைவருக்கு உற்சாக வரவேற்பு
ரிஷிவந்தியத்தில் பாதயாத்திரை பா.ஜ., தலைவருக்கு உற்சாக வரவேற்பு
ரிஷிவந்தியத்தில் பாதயாத்திரை பா.ஜ., தலைவருக்கு உற்சாக வரவேற்பு
ADDED : பிப் 01, 2024 06:20 AM

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியத்தில் நடந்த என் மண், என் மக்கள் பாதயாத்திரையில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலைக்கு நிர்வாகிகள் உற்சான வரவேற்பு அளித்தனர்.
ரிஷிவந்தியத்தில் பா.ஜ., சார்பில் என் மண், என் மக்கள் பாதயாத்திரை நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை போலீஸ்ஸ்டேஷன் அருகில் இருந்து தேரோடும் வீதி வழியாக அர்த்தநாரீஸ்வரர் கோவில் பகுதி வரை நடந்து சென்றார். அப்போது, பா.ஜ., நிர்வாகிகள் அண்ணாமலைக்கு மாலை, கிரீடம் மற்றும் சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். சிலர் 'வேல்' உள்ளிட்ட பொருட்களை பரிசாக வழங்கினர். பொதுமக்கள் சிலர் கோரிக்கை, புகார் மனுக்களை அளித்தனர். அப்போது, மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயினி, மாநில செயலாளர் அஸ்வத்தமன், மாவட்ட தலைவர்கள் அருள், கலிவரதன், சிறுபான்மையினரணி மாநில பொருளாளர் ஸ்ரீசந்த், செயற்குழு உறுப்பினர் பாலசுந்தரம், மாவட்ட செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஹரி, பிரிவு மாவட்ட தலைவர்கள் ராதாகிருஷ்ணன், மதியழகன், பிரபாகரன், ரிஷிவந்தியம் தெற்கு ஒன்றிய தலைவர் சின்னதுரை, பொதுச்செயலாளர்கள் ராமகிருஷ்ணன், சரவணன், பொருளாளர் வடமலை உட்பட நிர்வாகிகள் பலர் திரளாக பங்கேற்றனர்.
பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் அண்ணாலை பேசினார்.