தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ரயில் மோதி பெயிண்டர் பலி

 ரயில் மோதி பெயிண்டர் பலி

 ரயில் மோதி பெயிண்டர் பலி


ADDED : ஜூலை 09, 2026 04:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 04:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே ரயில் மோதி பெயிண்டர் இறந்தது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

திருநெல்வேலி பத்தமடை பிள்ளையார் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சரவணன் மகன் கார்த்திகேயன், 27; இவர் உட்பட 7 பேர் பரிக்கல் ரயில்வே ஸ்டேஷனில் பெயிண்டிங் வேலை செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் அனைவரும் சாப்பிட்டுவிட்டு துாங்கினர். நேற்று காலை எழுந்து பார்த்தபோது கார்த்திகேயன் மட்டும் காணவில்லை.

தேடி பார்த்தபோது பரிக்கல் ரயில்வே ஸ்டேஷன் அருகே ரயில் மோதி கார்த்திகேயன் இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவல் அறிந்த விருத்தாசலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கார்த்திகேயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து விருத்தாசலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us