/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஓவிய போட்டி: 25 பள்ளி மாணவர்கள் உற்சாகம்
/
ஓவிய போட்டி: 25 பள்ளி மாணவர்கள் உற்சாகம்
ADDED : மார் 22, 2025 04:05 AM

கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டை அருகே நடந்த, சுற்றுச்சூழல் விழிப்பணர்வு ஓவிய போட்டியில், 25 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
எலவனாசூர்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் சார்பில், தேசிய பசுமைப்படை மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் மெய்யப்பன் தலைமை தாங்கினார். உதவி தலைமையாசிரியர் வெங்கடேசன், முதுகலை ஆசிரியர் முகுந்தன், சங்கர், தர்மலிங்கம், பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் முன்னிலை வகித்தனர்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் வரவேற்றார்.
தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பற்றிய விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியப் போட்டி நடந்தது. இதில் உளுந்துார்பேட்டை பகுதியைச் சார்ந்த, 25 பள்ளியில் இருந்து 50 மாணவர்கள் பங்கேற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்று மற்றும் பரிசுகள் வழங்கப் பட்டன. தொடர்ந்து சுற்றுச் சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்த உறுதிமொழி நிகழ்ச்சி நடந்தது. போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் பொருட்டு மஞ்சள் பை வழங்கப்பட்டது.
பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சாமிதுரை நன்றி கூறினார்.