ADDED : அக் 13, 2025 12:15 AM

சங்கராபுரம்; சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம் சார்பில் ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.
அரசம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் ராமசாமி தலைமை தாங்கினார். முதுகலை ஆசிரியர்கள் ஏழுமலை, குமார், சுரேஷ், சின்னத்தம்பி, கிருஷ்ணவேணி, சத்யா, பெற்றோர் ஆசிரியர் கழகம் தலைவர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமையாசிரியர் ராமச்சந்திரன் வரவேற்றார்.
விழாவில் திரைப்பட இயக்குனர்கள் திலிப்குமார், கல்லை மாவட்ட முத்தமிழ் தமிழ்ச் சங்க தலைவர் முருககுமார், தேவபாண்டலம் கார் குழலி அறக்கட்டளை நிறுவன தலைவர் தாமோதரன், சங்கராபுரம் படைப்பாளர்கள் சங்க செயலாளர் சக்திவேல் ஆகியோர் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி வாழ்த்தினர். விழாவில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். தமிழ்ச் சங்க தலைவர் சவுந்தரராஜன் நன்றி கூறினார்.