/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பழனிசாமி இன்று திருக்கோவிலுார் வருகை மாவட்ட செயலாளர் குமரகுரு அழைப்பு
/
பழனிசாமி இன்று திருக்கோவிலுார் வருகை மாவட்ட செயலாளர் குமரகுரு அழைப்பு
பழனிசாமி இன்று திருக்கோவிலுார் வருகை மாவட்ட செயலாளர் குமரகுரு அழைப்பு
பழனிசாமி இன்று திருக்கோவிலுார் வருகை மாவட்ட செயலாளர் குமரகுரு அழைப்பு
ADDED : செப் 08, 2025 03:18 AM

திருக்கோவிலுார்:திருக்கோவிலுாரில் இன்று நடக்கும் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோ சனைக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது;
திருக்கோவிலுார், ரிஷிவந்தியம் தொகுதியில் 523 பூத்துகளை உள்ளடக்கிய, நிர்வாகிகளுக்கு அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி இன்று திருக்கோவிலுாரில் நடக்கும் நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, 126 உயரமுள்ள கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, சிறப்புரையாற்ற உள்ளார்.
இதில் பூத் கமிட்டி நிர்வாகிகள், கிளைக் கழக செயலாளர், வார்டு செயலாளர், பேரூர் வார்டு செயலாளர்களை உள்ளடக்கிய 5371 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், சார்பு அணியினர் அனைவரும் ஒட்டுமொத்தமாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெற்றி பெற செய்வதுடன், தமிழகத்தில் மீண்டும் பொதுச்செயலாளர் பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க., ஆட்சி அமைவதற்கான நிகழ்வாகவும், தமிழகம் திரும்பிப் பார்க்கும் வகையில கட்சியின் பொதுச்செயலாளருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.