/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரும்பாக்கம் ஏரியில் பனை விதை நடவு பணி
/
அரும்பாக்கம் ஏரியில் பனை விதை நடவு பணி
ADDED : ஆக 10, 2025 11:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அடுத்த அரும்பாக்கம் ஏரியில் திருக்கோவிலுார் லயன்ஸ் சங்கம், நாடொப்பனசெய் அறக்கட்டளை சார்பில் 4000 பனை விதை நடவு செய்யும் பணி நடந்தது.
திருக்கோவிலுார் அரிமா சங்கம், நாடொப்பனசெய் அறக்கட்டளை, அருள்மொழி இயற்கை வேளாண் பண்ணை, வாசவி கிளப், திருக்கோவிலுார் ஆண்கள் மேல்நிலை பள்ளி பசுமை படை மாணவர்கள் இணைந்து அரும்பாக்கம் பெரிய ஏரியில் 4000 பனை விதைகள் நடவு செய்யும் பணி நடந்தது. லயன்ஸ் சங்க தலைவர்கள் சூரியகலா, பாலமுருகன் தலைமை தாங்கினர். நாடொப்பனசெய் அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் பசுமை படை மாணவர்கள் பனை விதைகளை ஏரிக்கரை முழுவதும் நடவு செய்தனர்.