/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வாராஹி அம்மன் கோவிலில் பஞ்சமி வழிபாடு
/
வாராஹி அம்மன் கோவிலில் பஞ்சமி வழிபாடு
ADDED : ஜூன் 01, 2025 04:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே வாராஹி அம்மன் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த மாடூர் டோல்கேட் அருகே நிறைமதி சாலையில் உள்ள பஞ்சமுக மஞ்சள் வாராஹி அம்மன் கோவிலில், வளர்பிறை பஞ்சமியையொட்டி, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன.
அம்மனுக்கு பட்டு சார்த்தி, தங்க கவச அலங்காரத்தில் தீபாராதனை செய்யப்பட்டடன.
பெண்கள் கோவிலில் உள்ள அம்மிக்கல்லில் பச்சை விரலி மஞ்சளை அரைத்து ஜல வாராஹி அம்மனுக்கு சார்த்தி நேர்த்திக்கடன் பூஜைகளை செய்தனர்.