/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அ.பாண்டலம் கிராமத்தில் ஊராட்சி தலைவர்கள் களப்பயணம்
/
அ.பாண்டலம் கிராமத்தில் ஊராட்சி தலைவர்கள் களப்பயணம்
அ.பாண்டலம் கிராமத்தில் ஊராட்சி தலைவர்கள் களப்பயணம்
அ.பாண்டலம் கிராமத்தில் ஊராட்சி தலைவர்கள் களப்பயணம்
ADDED : ஜூலை 14, 2025 03:56 AM

சங்கராபுரம் : அ.பாண்டலத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் களப்பயணம் மேற்கொண்டனர்.
மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை, ஊராட்சி துறை சார்பில் மாவட்ட அளவில், மகளிர் ஊராட்சி தலைவர்களுக்கு 2 நாள் பயிற்சி கள்ளக்குறிச்சியில் நடந்தது. 3ம் நாளான நேற்று ஊராட்சி களப் பயணமாக சங்கராபுரம் ஒன்றியம் அ.பாண்டலம் ஊராட்சிக்கு மகளிர் ஊராட்சி தலைவர்கள் வந்தனர். மாவட்ட அதிகாரிகள், சங்கராபுரம் பி.டி.ஓ.,க்கள் அய்யப்பன், ராதாகிருஷ்ணன் உடன் வந்தனர்.
ஊராட்சி தலைவர் பாப்பாத்தி நடராஜன் வரவேற்று, டில்லியில் நடந்த குடியரசு தின விழாவில் சிறந்த ஊராட்சி தலைவர்களுக்கான விருது பெற காரணமாக இருந்த, ஊராட்சியின் செயல்பாடுகள், பதிவேடுகள், துாய்மை சுகாதாரம், மகளிர் தொழில் துவங்குதல் ஆகியவை குறித்து ஆலோசனை வழங்கினார். சரியான கட்டமைப்புகளுடன் பணிபுரிந்தால் பல விருதுகள் நம்மை தேடி வரும் அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக்குழுவினர்கள், வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

