/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஊராட்சி தலைவியின் கணவர் விபத்தில் பலி
/
ஊராட்சி தலைவியின் கணவர் விபத்தில் பலி
ADDED : ஆக 07, 2025 11:41 PM
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் அருகே ஊராட்சி தலைவியின் கணவர் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருக்கோவிலுார் அடுத்த சாங்கியம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசி, 40; ஊராட்சித் தலைவர். இவரது கணவர் அய்யனார், 45; நேற்று முன்தினம் இரவு 10:45 மணி அளவில் சாங்கியத்தில் இருந்து மணலுார்பேட்டைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
திருக்கோவிலுார் - மணலுார்பேட்டை சாலையில், சாங்கியம், ராமலிங்கம் என்பவர் வீட்டில் முன்பாக சென்றபோது நாய் குறுக்கிட்டதால் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த புளிய மரத்தில் பைக் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஐயனாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து அவரது மனைவி இளவரசி புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.