/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விழுப்புரம் அருகே ஊராட்சி செயலர் வெட்டிக்கொலை
/
விழுப்புரம் அருகே ஊராட்சி செயலர் வெட்டிக்கொலை
ADDED : ஜூலை 05, 2025 02:34 AM

திருக்கோவிலுார்:விழுப்புரம் அருகே ஊராட்சி செயலர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், விழுப்புரம் அடுத்த சாங்கியம் ஊராட்சியை சேர்ந்தவர் அய்யனார், 45; ஊராட்சி செயலர்.
நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த அய்யனாரை, அதே கிராமத்தை சேர்ந்த அய்யப்பன், 50, அழைத்துச் சென்றார். இரவு அய்யனார் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், நேற்று காலை அய்யப்பனின் கோழிப்பண்ணை அருகே உள்ள எள் வயலில், அய்யனார் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
அவ்வழியே சென்றவர்கள், அய்யனாரை மீட்டு, திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இறந்தார்.