/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பாண்டுவனேஸ்வரர் கோவில் மகா கும்பாபிேஷக விழா
/
பாண்டுவனேஸ்வரர் கோவில் மகா கும்பாபிேஷக விழா
ADDED : பிப் 02, 2024 11:30 PM

சங்கராபுரம், -தேவபாண்டலம் பாண்டுவனேஸ்வரர் கோவில் உட்பட 4 கோவில்களில் ஒரே நாளில் மகா கும்பாபிேஷகம் நடந்தது.
சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் பாண்டுவனேஸ்வரர் கோவில், செல்வ விநாயகர், முத்து மாரியம்மன், கெங்கையம்மன் ஆகிய கோவில்களில் நடந்த கும்பாபிேஷக விழா, நேற்று முன்தினம் யாக சாலை பூஜைகளுடன் துவங்கியது.
தொடர்ந்து நேற்று காலை ரவி குருக்கள் தலைமையில் 15க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் முன்னிலையில் வாஸ்து பூஜை, கோ பூஜை, யாக வேள்வி பூஜை நடந்தது. தொடர்ந்து கடம் புறப்பாடாகி, விநாயகர், முத்துமாரியம்மன், கெங்கையம்மன், பாண்டுவனேஸ்வரர் கோவில்களில் மகா கும்பாபிேஷகம் நடந்தது. விழாவில் சங்கராபுரம் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

