/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தலை துண்டான இரு உடல்கள் ரயில் பாதையில் கிடந்ததால் பீதி
/
தலை துண்டான இரு உடல்கள் ரயில் பாதையில் கிடந்ததால் பீதி
தலை துண்டான இரு உடல்கள் ரயில் பாதையில் கிடந்ததால் பீதி
தலை துண்டான இரு உடல்கள் ரயில் பாதையில் கிடந்ததால் பீதி
ADDED : நவ 21, 2024 01:39 AM
உளுந்துார்பேட்டை:கள்ளக்குறிச்சி அடுத்த கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் மஜ்ஜீத் மகன் முகமது ரபீக், 50, இவர் கள்ளக்குறிச்சியிலிருந்து விழுப்புரம் செல்வதாகக் கூறிவிட்டு சென்றார்.
நேற்று அதிகாலை 2:00 மணிக்கு உளுந்துார்பேட்டையில் இருந்து பரிக்கல் செல்லும் ரயில் பாதையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
தகவல் அறிந்த விருத்தாசலம் ரயில்வே போலீசார், முகமது ரபிக் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, நேற்று காலை 7:00 மணிக்கு உளுந்துார்பேட்டை அடுத்த செங்குறிச்சி அருகே உளுந்துார்பேட்டை - பரிக்கல் ரயில் பாதையில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.
விருத்தாசலம் ரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விருத்தாசலம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.