/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தென்மாவட்டங்களுக்கு வாகனங்கள் அணிவகுப்பு : எஸ்.பி., நேரில் ஆய்வு
/
தென்மாவட்டங்களுக்கு வாகனங்கள் அணிவகுப்பு : எஸ்.பி., நேரில் ஆய்வு
தென்மாவட்டங்களுக்கு வாகனங்கள் அணிவகுப்பு : எஸ்.பி., நேரில் ஆய்வு
தென்மாவட்டங்களுக்கு வாகனங்கள் அணிவகுப்பு : எஸ்.பி., நேரில் ஆய்வு
ADDED : அக் 31, 2024 07:23 AM

விக்கிரவாண்டி ; தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து ஏராளமானோர் தென்மாவட்டங்களுக்கு புறப்பட்டுச் சென்றதால், தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவில் வாகனங்கள் அணிவகுத்தன.
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி, இன்றும் நாளையும் அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதை தொடர்ந்து 2ம் தேதி சனிக்கிழமை, 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறையாக உள்ளது.
அதையொட்டி, சென்னையில் வசிக்கும் தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட நேற்று முன்தினம் மாலை முதல் அரசு பஸ், ஆம்னி பஸ் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களில் புறப்பட்டுச் சென்றனர்.
அதன்காரணமாக, நேற்று முன்தினம் மாலை 4.00 மணிக்கு மேல் தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவில் வாகனங்கள் சென்றன. நேற்று முன்தினம் இரவு முதல், எஸ்.பி., தீபக் சிவாச் தலைமையில் , டி.எஸ்.பி., நந்தகுமார் உள்ளிட்ட போலீசார் விக்கிரலவாண்டி டோல் பிளாசாவில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
வாகனங்கள் எளிதில் கடந்து செல்லும் வகையில் தென்மாவட்டங்களை நோக்கி செல்லும் வாகனங்களுக்கு கூடுதலாக இரண்டு லேன்களை திறந்து 9 லேன்கள் வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி வரை 41 ஆயிரம் வாகனங்களும், நள்ளிரவு 12 மணி முதல் நேற்று பிற்பகல் 2.00 மணி வரை 31 ஆயிரம் வாகனங்கள் டோல் பிளாசாவை கடந்து சென்றன.