/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பாரா மெடிக்கல் டிப்ளமோ சேர்க்கை துவக்கம்
/
பாரா மெடிக்கல் டிப்ளமோ சேர்க்கை துவக்கம்
ADDED : மே 29, 2025 01:27 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ராஜூ மருத்துவமனையில் பாரா மெடிக்கல் டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது.
கள்ளக்குறிச்சி சுந்தர விநாயகர் கோவில் தெருவில் உள்ள ராஜூ இருதயம் மற்றும் தோல் சிகிச்சை மருத்துவமனையில் இந்திய மருத்துவ சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாராமெடிக்கல் வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.
ஏழை எளிய மாணவ, மாணவியருக்கு உதவிடும் வகையில் குறைந்த கட்டணத்தில் சேர்க்கை நடக்கிறது. என்.ஏ.பி.எச். தரச்சான்றிதழ் பெற்ற அதிநவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனையில் குறைந்த கட்டணத்தில் பாராமெடிக்கல் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு படிப்பு முடித்த உடன், 100 சதவீத வேலை வாய்ப்பு உறுதியாகிறது.
அட்வான்ஸ் ஹெல்த் அசிஸ்டெண்ட் டிப்ளமோ-3 ஆண்டு; ஹெல்த் அசிஸ்டெண்ட் டிப்ளமோ-2 ஆண்டு; லேப் டெக்னிஷீயன் டிப்ளமோ-2 ஆண்டு; வகுப்புகள் உள்ளன. பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேர்க்கை பெறலாம். அதிக மதிப்பெண் பெற்ற ஏழை மாணவர்களுக்கு முழு கட்டண சலுகை வழங்கப்படுகிறது.
இது குறித்து, 94440 69866 என்ற மொபைல் எண்ணில் தகவல் பெறலாம். முன்பதிவு செய்யும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மருத்துவமனை தலைவர் பாபு சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

