ADDED : ஏப் 13, 2026 11:18 PM

அ நிறம் | அளவு
உளுந்துார்பேட்டை: எலவனாசூர்கோட்டையில் துணை ராணுவ படை மற்றும் போலீசாரின் பாதுகாப்பு அணி வகுப்பு ஒத்திகை நடந்தது.
சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டு போடவும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவும் நேற்று எலவனாசூர்கோட்டை பகுதியில் துணை ராணுவ படை மற்றும் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடந்தது.
டி.எஸ்.பி., அசோகன் தலைமையில் போலீசாரும், துணை ராணுவ படை கமாண்டர் பங்கச் தலைமையில் துணை ராணுவ படையினர் 100க்கும் மேற்பட்டோர் எலவனாசூர்கோட்டை காவல் நிலையம் பகுதியில் இருந்து பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய சாலை வழியாக ஊர்வலம் சென்றனர்.
