/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பங்காரம் லட்சுமி கல்லுாரியில் பெற்றோர், ஆசிரியர் கலந்தாய்வு
/
பங்காரம் லட்சுமி கல்லுாரியில் பெற்றோர், ஆசிரியர் கலந்தாய்வு
பங்காரம் லட்சுமி கல்லுாரியில் பெற்றோர், ஆசிரியர் கலந்தாய்வு
பங்காரம் லட்சுமி கல்லுாரியில் பெற்றோர், ஆசிரியர் கலந்தாய்வு
ADDED : ஆக 14, 2025 11:34 PM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் லட்சுமி கல்லுாரியில் பெற்றோர், ஆசிரியர் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, கல்வி நிறுவனங்களின் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், பொருளாளர் சாந்தி, இயக்குனர் சரவணன், ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் சசிகலா வரவேற்றார்.
கல்லுாரி முதல்வர் பழனியம்மாள், துணை முதல்வர் சக்திவேல் வாழ்த்தி பேசினார். கல்லுாரி துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்களின் முதல் பருவத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, பெற்றோர்களிடம் கல்வி தர அட்டைகளை காண்பித்து எடுத்துரைத்தனர்.
பேராசிரியர் மகேந்திரன் நன்றி கூறினார்.