/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம்
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம்
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம்
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம்
ADDED : நவ 20, 2024 06:38 AM
கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடந்தது. கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார்.
துறைத்தலைவர்கள் அங்குராஜ், அகமதுசுல்தான், சக்திவேல், அருள், பிரவீனா, சக்தி பிருந்தா, நர்கீஸ்பேகம், சித்ராதேவி முன்னிலை வகித்தனர். கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவர் அசோக் வரவேற்றார்.
பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் மீது தனி கவனம் செலுத்த வேண்டும்.
கல்லுாரிக்கு தினமும் செல்கிறார்களா என கண்காணிப்பது அவசியம், அதிக நேரம் மொபைல் போன்களை பயன்படுத்தவும், இரு சக்கர வாகனங்களில் கல்லுாரிக்கு செல்லவும் அனுமதிக்காதீர்கள்.
தனி மனித ஒழுக்கும் முக்கியம் என்பதால், ஒழுங்காக முடி திருத்துமாறும், நல்ல ஆடைகளை அணிந்து செல்லுமாறும் அறிவுறுத்துங்கள்.
தேர்வு முடிவுகளை கேட்டறிவதுடன், வீட்டில் தினமும் படிக்க அறிவுறுத்துங்கள்.
மாதத்திற்கு இரு முறை கல்லுாரிக்கு வந்து பிள்ளைகளின் நலன் குறித்து கேட்டறியுங்கள் என, பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. துணை முதல்வர் ஜான்விக்டர் நன்றி கூறினார்.