/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பள்ளி மாணவர்கள் மோதல் சம்பவங்களால் பெற்றோர்கள் அச்சம்; எதிர்காலம் கேள்விகுறி
/
பள்ளி மாணவர்கள் மோதல் சம்பவங்களால் பெற்றோர்கள் அச்சம்; எதிர்காலம் கேள்விகுறி
பள்ளி மாணவர்கள் மோதல் சம்பவங்களால் பெற்றோர்கள் அச்சம்; எதிர்காலம் கேள்விகுறி
பள்ளி மாணவர்கள் மோதல் சம்பவங்களால் பெற்றோர்கள் அச்சம்; எதிர்காலம் கேள்விகுறி
ADDED : ஜூலை 19, 2025 03:00 AM

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை பகுதியில் மாணவர்கள் அடிக்கடி மோதிக்கு கொள்ளும் சம்பவத்தால் பெற்றோர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பள்ளியில் ஒழுங்கீனத்தில் ஈடுபடும் சில மாணவர்களை ஆசிரியர்கள் கண்டித்தால், உடனே பெற்றோரை அழைத்து வந்து தகராறு செய்கின்றனர். இதனால் நமக்கு ஏன் வம்பு பள்ளிக்கு வந்தோம், பாடம் நடத்தினோம் என்ற மனநிலைக்கு பல ஆசிரியர்கள் வந்து விட்டனர். கண்டிப்பு குறைந்துவிட்டதால், பல மாணவர்கள், அப்பள்ளியில் தான் பெரிய ஆள் என்பதை உறுதிபடுத்த, மாணவர்களுக்குள் மோதிக் கொள்கின்றனர். இந்த மோதல் சம்பங்கள் உளுந்துார்பேட்டையில் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
பஸ் நிலைய பகுதி மற்றும் பயணம் செய்யும் பஸ் உள்ளேயும் மாணவர்கள் மோதிக் கொள்கின்றனர். சம்பவ இடத்திற்கு போலீஸ் சென்றாலும், மாணவர்கள் எதிர்காலம் கருதி எச்சரித்து அனுப்பிவிடுகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு உளுந்துார்பேட்டையில் விருத்தாசலம் சாலை, பஸ் நிலையம், பாச்சாப்பாளையம் என ஒரே நாளில் மூன்று இடங்களில் மாணவர்கள் தாக்கி கொண்டனர். இதில் வெளியாட்களும் பங்கேற்று தாக்குகின்றனர்.
கடந்த 3 வாரங்களுக்கு முன்பு கல்லூரி நர்சிங் மாணவிகள், உளுந்துார்பேட்டை பஸ் நிலையம் அருகே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று மாணவிகளை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். விருத்தாசலம் சாலையில் மாணவர்கள் தாக்கிக் கொண்ட சம்பவத்தில், காயம் ஏற்பட்டதால் 2 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
பள்ளி மாணவர்கள் மோதிக் கொள்ளும் சம்பவங்களை கட்டுப்படுத்த பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் கொண்ட குழுக்களை அமைத்து ஆலோசனைகள் வழங்கி நல்வழிப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.