
01,
குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக தினமலர் நாளிதழின் இந்த நிகழ்ச்சியை வரவேற்கிறோம். கல்வியில் முதல் எழுத்தான 'அ' என எழுதி குழந்தையின் கல்வியறிவை துவக்கி வைப்பது சிறப்பான நிகழ்வாகும், அதனை தினமலர் சமூக சேவையாக செய்து வருவது அனைவரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. தினமலர் நாளிதழின் இது போன்ற சமுக பணி தொடர எனது வாழ்த்துக்கள்.
*ரஞ்சித், பெரியமாம்பட்டு
02,
குழந்தைகள் உயர்ந்த நிலையை அடைவதற்கான துவக்கமே இந்த 'அ' என எழுத துவங்கி அஸ்திவரமாக இருப்பது தினமலர் நாளிதழியின் வித்யாரம்பம் நிகழ்ச்சி. குறிப்பாக தங்களது பிள்ளைகளின் முதல் கல்வி பயணத்தின் புகைப்படத்துடன் கூடிய சான்றிதழ் மிகந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுதோறும் தினமலர் நாளிதழ் நடத்தும் இந்த நிகழ்ச்சி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
*திவ்யா, கள்ளக்குறிச்சி.
03,
விஜயதசமி நாளில் கல்வியை துவக்கி வைக்கும் தினமலர் நாளிதழ், ஏ.கே.டி., கல்வி நிறுவனங்களின் இந்த முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள். குழந்தைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தியான கல்வியை துவக்கி வைக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி பெற்றோரிடையே ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிக்கை என்ற பார்வை மட்டுமல்லாமல் தினமலரின் இது போன்ற சேவை பாராட்டுக்குறியது.
சுபத்ரை, கள்ளக்குறிச்சி.
04,
எதையும் அறியாமல் இருக்கும் குழந்தைகளின் கல்விக்கு முகவரி கொடுக்கும் விதமாக தினமலர் நாளிதழ் நடத்தும் இந்த வித்யாரம்பம் நிகழ்ச்சி பெற்றோருக்கு ஊக்கத்தை தருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் குழ்நதைக்கு 'அ' என முதல் எழுத்தை எழுத வைத்து நினைவு கூறும் வகையில் புகைப்பட சான்றிதழ் வழங்குவது சான்றாக அமைந்துள்ளது.
*ஸ்ரீதர், சூளாங்குறிச்சி
05,
பள்ளி பருவத்திற்கு அடியெடுத்து வைக்கும் குழந்தைகளுக்கு தினமலர் நாளிதழியின் வித்யாரம்பம் நிகழ்ச்சி மூலம் பிள்ளையார் சுழி போட்டி கல்வியை துவக்கி வைக்கின்றனர். தினமலர் நாளிதழுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த நிகழ்வு குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சிக்கு ஊன்று கோலாக அமையும்.
*ராஜ்கமல். மட்டிகைக்குறிச்சி.