/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையின் எக்ஸ்ரே பிரிவில் ஊழியர் பற்றாக்குறை நோயாளிகள் கடும் அவதி
/
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையின் எக்ஸ்ரே பிரிவில் ஊழியர் பற்றாக்குறை நோயாளிகள் கடும் அவதி
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையின் எக்ஸ்ரே பிரிவில் ஊழியர் பற்றாக்குறை நோயாளிகள் கடும் அவதி
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையின் எக்ஸ்ரே பிரிவில் ஊழியர் பற்றாக்குறை நோயாளிகள் கடும் அவதி
ADDED : டிச 31, 2024 06:36 AM
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி எக்ஸ்ரே பிரிவில் போதிய பணியாளர்கள் இல்லாததால் பல மணி நேரம் நோயாளிகள் அவதியடைகின்றனர்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை சிறுவங்கூர் கிராமத்தில் இயங்கி வருகிறது. மாவட்டம் முழுவதிலும் இருந்து தினசரி 1000க்கும் அதிகமான நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.
ஆனால் அனைத்து பிரிவுகளிலும் போதிய பணியாளர்கள் இல்லாததால் இந்த மருத்துவமனையில் முறையான சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
தரைத்தளத்தில் இயங்கி வரும் எக்ஸ்ரே பிரிவில் டோக்கன் போடுவதற்கு ஒருவர், உதவியாளர் ஒருவர், தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் மட்டுமே பணி செய்து வருகின்றனர்.
இங்கு டாக்டர்களின் பரிந்துரைப்படி எக்ஸ்ரே எடுக்க வரும் நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால் விபத்தில் பாதிப்படைந்தவர்களும் பல மணி நேரம் காத்திருந்த பின்னரே எக்ஸ்ரே எடுத்து செல்கின்றனர்.
சர்க்கரை நோய் மாத்திரை வாங்குபவர்கள் அனைவரும் எக்ஸ்ரே எடுப்பது கட்டாயம் என்பதால் எக்ஸ்ரே பிரிவில் அதிகளவில் கூட்டம் ஏற்படுகிறது.
எக்ஸ்ரே எடுத்துவந்தால்தான் மருந்து தர முடியும் என டாக்டர்களின் கட்டாயத்தால் நோயாளிகள் பலரும் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்கின்ற அவலம் நீடித்து வருகிறது.
எக்ஸ்ரே எடுத்துவிட்டு டாக்டர்களை பார்க்க சென்றால், மதியத்திற்கு மேல் டாக்டர்கள் யாரும் மருத்துவமனையில் இருப்பதில்லை. இதனால் சர்க்கரை நோயாளிகள் பலரும் மருந்து வாங்க முடியாமல் திரும்பி செல்கின்றனர்.
எனவே நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லுாரி எக்ஸ்ரே பிரிவில் கூடுதலாக பணியாட்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம், சுகாதரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.