/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பவுஞ்சிபட்டு - லக்கிநாயக்கன்பட்டி சாலை படுமோசம்
/
பவுஞ்சிபட்டு - லக்கிநாயக்கன்பட்டி சாலை படுமோசம்
ADDED : ஆக 12, 2025 02:42 AM

ப வுஞ்சிபட்டு - லக்கிநாயக்கன்பட்டி செல்லும் சாலை படுமோசமாக உள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த பவுஞ்சிபட்டு லக்கிநாயக்கன்பட்டி தார் சாலை கல்வராயன்மலைக்கு செல்லும் பாதையாகவும், மலை கிராம மக்கள் திருவண்ணாமலை மற்றும் மூங்கில்துறைப்பட்டு செல்லும் பிரதான சாலையாக உள்ளது. இச்சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக கிடக்கிறது.
மழை நேரத்தில் சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகளால் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இருசக்கர வாகனங்களில் சொல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கி கொள்கின்றனர்.
சாலையை சீர்செய்ய ஊராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறையிடும் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

