/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாற்றுத்திறனாளி மாணவிக்கு கல்வி கட்டணம் வழங்கல்
/
மாற்றுத்திறனாளி மாணவிக்கு கல்வி கட்டணம் வழங்கல்
ADDED : ஆக 06, 2025 12:38 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த தெ ன்கீரனுார் சேர்ந்த மருதமுத்து, புவனேஸ்வரி தம்பதி மகள் பிரியதர்ஷினி,19; மாற்றுத்திறனாளி.
கடந்த 2023ம் ஆண்டு பிளஸ் 2 முடித்தவுடன், பிரியதர்ஷினி தச்சூர் பாரதி கல்லுாரியில் பி.காம்., அட்மிஷன் கிடைத்த நிலையில், அவரது தந்தை மருதமுத்து விபத்திலும், தாய் புவனேஸ்வரி டெங்கு காய்ச்சலில் அடுத்தடுத்து இறந்தனர். தனது கல்வி தொடர கள்ளக்குறிச்சி நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை முன்வந்தது.
மாணவியின் 2ம் ஆண்டு கல்வி கட்டணம் ரூ. 28,500 க்கான காசோலையை, அறக்கட்டளை தலைவர் பெருமாள், செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் அன்பழகன், ஒருங்கிணைப்பாளர் அரவிந்தன் மற்றும் உறுப்பினர்கள் அசோக்குமார், சாதிக்பாஷா, பாலாஜி, வில்சன் ஆகியோர் மாணவியிடம் வழங்கினர்.
அதைத் தொடர்ந்து, பானையங்கால் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி வளாகத்தில் அறக்கட்டளை சார்பில் மரக்கன்று நடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் சக்திவேல் நன்றி கூறினார்.