ADDED : ஜூலை 04, 2025 02:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே கூழாங்கற்கள் கடத்திய டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
உளுந்துார்பேட்டை எடைக்கல் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உளுந்ததுார்பேட்டையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதி இன்றி கூழாங்கற்கள் கடத்திச் சென்றது தெரியவந்தது. அதன் பேரில் டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து எடைக்கல் போலீசார் வழக்குப் பதிந்து கூழாங்கற்கள் கடத்திய ஆலடி பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, 39; என்பவரை கைது செய்தனர்.