ADDED : அக் 03, 2024 11:35 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க உலக முதியோர் தின விழா கூட்டம் நடந்தது.
கச்சிராயபாளையம் சாலை டேனிஷ் மிஷன் தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்டத்தலைவர் புலவர் மோகன் தலைமை தாங்கினார். முன்னாள் கிராம உதவியாளர் சங்க மாநில தலைவர் ராசு முன்னிலை வகித்தார்.
மாவட்டச் செயலாளர் கேசவராமானுஜம் வரவேற்றார். நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் வாழ்த்துரை வழங்கினார். வட்டத்தலைவர்கள் அன்பழகன் தங்கவேலு, முருகவேள், டேவிட் சாமுவேல்ராஜ், வட்டச் செயலாளர் ஜெயபாலன், துணைத்தலைவர் சாந்தி ஆகியோர் பேசினர்.
மூத்த உறுப்பினர் முகமது இஸ்மாயில், மாவட்டத்தலைவர் புலவர் மோகன் ஆகியோர்களின் தமிழ்பணியை பாராட்டி புலவர் அமுதா வாசிப்புப்பலகை, பொற்கிழி வழங்கி கவுரவித்தார்.
மாவட்டத்துணைத்தலைவர் கிருஷ்ணசாமி, மாவட்டப்பொருளாளர் பாசுகரன், சித்த மருத்துவர் வரதராசன் ஆகியோர் உடலநலம் பேணும் வழிமுறை மற்றும் அவசியம் குறித்து விளக்கினார். மாவட்டத்துணைத்தலைவர் கிருஷ்ணசாமி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். பாஸ்கரன் நன்றி கூறினார்.