
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம் : சின்னசேலத்தில் ரயில்வே பென்ஷனர்கள் சங்கம் மற்றும் 23வது பொது மகா சபைக் கூட்டம் நடந்தது.
சங்கத் தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் வெங்கடாசலம் ஆறுமுகம், வடிவேல், வெங்கடாசலம் வரவேற்றனர். விழாவில் புதிய தலைவராக செல்வ ராஜூ பொதுச் செயலாளராக சிவாஜி உதவி செயலாளராக மனோகரன் பொருளாளராக தங்கவேல் மற்றும் 24 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தில், குணசேகரன் வங்கியில் உள்ள சிறப்பு திட்டங்களை பென்ஷன்தார்களுக்கு விளக்கினார். ஸ்டேட் பாங்க் சக்திவேல் டிபாசிட் சேவை பற்றி பேசினார்.
கூட்டத்தில், கூட்டத்திற்கு திண்டுக்கல், தஞ்சை, திருச்சி, செங்கல்பட்டு, சென்னை , பெத்தநாயக்கன்பாளையம், விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் இருந்து பென்ஷன்தாரர்கள், பங்கேற்றனர்.