/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஓய்வூதியர் சங்கத்தினர் மணம்பூண்டியில் ஆர்ப்பாட்டம்
/
ஓய்வூதியர் சங்கத்தினர் மணம்பூண்டியில் ஆர்ப்பாட்டம்
ஓய்வூதியர் சங்கத்தினர் மணம்பூண்டியில் ஆர்ப்பாட்டம்
ஓய்வூதியர் சங்கத்தினர் மணம்பூண்டியில் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 12, 2025 10:16 PM

திருக்கோவிலுார்: தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மணம்பூண்டி பி.டி.ஓ., அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் துணைத் தலைவர்கள் தர்மலிங்கம், குப்புசாமி, வட்ட இணைச் செயலாளர்கள் தேன்மொழி, இராமநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயராமன் முன்னிலை வகித்தனர். வட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். வட்டச் செயலாளர் குணசேகரன் வரவேற்றார்.
மாவட்ட இணை செயலாளர் மோகன், நிர்வாகிகள் விருத்தகிரி, சரவணன், பார்த்தசாரதி உள்ளிட்டோர் கோரிக்கை வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மதிவாணன் நன்றி கூறினார்.