/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 12, 2025 03:30 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் 5 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்க வட்ட தலைவர் நல்லாப்பிள்ளை தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் ராமச்சந்திரன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் கேசவராமானுஜம் தொடக்க உரையாற்றினார். மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியதாரர்களுக்கு 10 சதவீதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்குதல், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், ஊராட்சி செயலாளர்களாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்குதல், மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைகளை நீக்கி, அனைத்து ஓய்வூதியர்களுக்கும் முழுமையான சிகிச்சை செலவு தொகை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், நிர்வாகிகள் ராசு, கல்யாணசுந்தரம், முத்துசாமி, முராரி செல்வராஜ், சடகோபன், அருளப்பன், உருக்குமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவிந்தராஜன் நன்றி கூறினார்.

