/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஓய்வூதியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
/
ஓய்வூதியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 24, 2025 11:47 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில், ஓய்வூதியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். பிரசார செயலாளர் ஜெகநாதன் முன்னிலை வகித்தார். செயலாளர் கந்தசாமி வரவேற்றார். துணைத் தலைவர்கள் ராமலிங்கம், ஜெயினுலாப்தீன், அமைப்பு செயலாளர் அசோகன், மகளிரணி செயலாளர் ராதிகா, இணைச் செயலாளர் கணேசன், மத்திய செயற்குழு உறுப்பினர் மாரியப்பன் சிறப்புரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், 70 வயது நிறைவடைந்தவர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களுக்கு மாதம்தோறும் 7,580 ரூபாய் வழங்க வேண்டும்.
குடும்ப பாதுகாப்பு நிதி 50 ஆயிரத்தை, 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி, இத்திட்டத்தினை ஓய்வூதியர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். ஓய்வூதியர்கள் மாதத்தில் எந்த தேதியில் இயற்கை எய்தினாலும், அந்த மாதத்திற்குரிய முழு ஓய்வூதிய தொகை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாவட்ட பொருளாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.

